இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
விண்ணப்பதாரர் கீழ்க்கண்டவற்றை தயார் நிலையில் வைத்துக் கொண்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பதாரரின் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (150 * 150 pixel மற்றும் 50 kb-க்கும் குறைவான jbeg / jpg வடிவில்)
( கீழ்க்கண்ட ஆவணங்கள் அனைத்தும் 500 kb-க்கும் குறைவான PDF/jbeg/jpg வடிவில் இருக்க வேண்டும்.)
- ஆதார் அட்டை
- +2 மதிப்பெண் பட்டியல்
- சாதிச் சான்றிதழ்
- மாற்றுச் சான்றிதழ் (இருப்பின்)
- விளையாட்டில் சிறப்புத் தகுதிக்கான சான்றிதழ்கள் -for sports quota
- முன்னாள் படைவீரர் சான்றிதழ் – for ex-serviceman quota
- மாற்றுத் திறனாளர் சான்றிதழ் – for physically challenged quota
• முதலாவதாக, google chrome தேடுதளத்தில் www.gacw.in என்று டைப் செய்து கல்லூரி இணையதளத்திற்குள் சென்று ‘Apply Online’ என்ற பட்டனைக் கிளிக் செய்து http://www.gacw.in/applyonline/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
• மேற்கூறிய இணையதளத்தில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவிற்கு விண்ணப்பிப்பதற்கு 12-ஆவது வகுப்பில் படித்து இருக்க வேண்டிய பாடவிவரப்பட்டியல் (Eligibility criteria for the admission of UG Courses) கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் சரிபார்த்தபின், தகுதியான பாடப்பிரிவை முடிவு செய்து விட்டு ‘Apply Online’ என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
• https://erp.aei.edu.in/applynow/#/ என்ற இணையதளப் பக்கத்தில் (ADITANAR EDUCATIONAL INSTITUTION ONLINE APPLICATION) விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான நான்கு கட்ட வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ‘Proceed to Application’ என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
• Step 1 – Applicant Details: விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், பிறந்தநாள், பாலினம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்தபின், Next பட்டனைக் கிளிக் செய்யவும்.
• Step 2 – Contact Details: மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் , வீட்டு முகவரி, நாடு, மாநிலம், நகரம் முதலிய விவரங்களைப் பதிவு செய்தபின், Next பட்டனைக் கிளிக் செய்யவும்.
• Step 3 – Select Programme: Institute என்பதில் கொடுக்கப்பட்டிருக்கும் கல்லூரிகளின் பெயர்ப்பட்டியலில்
Govindammal Aditanar College for Women, Tiruchendur – ஐத் தேர்ந்தெடுக்கவும்.
• Program Level என்பதில் “Under Graduate”-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
• Program என்பதில், நீங்கள் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். (ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும்).
• Batch என்பதில், 2020-2023 கல்வி ஆண்டினைத் தேர்வு செய்யவும்.
• Quota என்பதில், தங்களுக்கான சரியான பிரிவினைத் தேர்வு செய்தபின் Next பட்டனைக் கிளிக் செய்யவும்.
• Step 4 – Checkout Process: தாங்கள் பதிவுசெய்த விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்தபின், ‘I declare that my admission may be cancelled at any stage, if I am found ineligible and/or the information provided by me are found to be incorrect’ என்பதன் அருகில் உள்ள கட்டத்தினைக் கிளிக் செய்து, Pay Now பட்டனைக் கிளிக் செய்யவும்.
• Payment option வழியாக விண்ணப்பப் படிவத்திற்கான தொகை ரூபாய் 100-ஐச் செலுத்தவும்.
• Payment process நிறைவு பெற்றதும், தங்கள் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியும் (SMS) மின்னஞ்சல் முகவரிக்கு (email id) மின்னஞ்சலும் அனுப்பி வைக்கப்படும்.
• அடுத்து, https://erp.aei.edu.in என்ற இணையதளத்தில் ‘Applicant’ என்பதைக் கிளிக் செய்தபின் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள User Name மற்றும் Password-ஐப் பயன்படுத்தி sign in பண்ணவும்.
• அடுத்து வரக்கூடிய பக்கத்தில், தங்களது Personal Details அடையாளத்தைக் (icon) கிளிக் செய்யவும். புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்துவிட்டு + அடையாளத்தைக் கிளிக் செய்து மற்ற விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
• அடுத்து Contact Details அடையாளத்தைக் (icon) கிளிக் செய்து முகவரி விவரங்கைளப் பூர்த்தி செய்யவும்.
• அடுத்து Education Details அடையாளத்தைக் (icon) கிளிக் செய்து Subject என்பதன் அருகிலுள்ள + அடையாளத்தைக் கிளிக் செய்யவும். தாங்கள் படித்த ஒவ்வொரு பாடம் மற்றும் அதில் பெற்றுள்ள மதிப்பெண் ஆகியவற்றைப் பதிவு செய்யவும். கல்வித்தகுதி குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்தபின் Save பட்டனைக் கிளிக் செய்யவும்.
• அடுத்து Documents upload பக்கத்தில் ஒவ்வொரு ஆவணமாகக் கிளிக் செய்து பதிவேற்றம் (upload) செய்யவும்.
• இறுதியாக GACW என்று தொடங்கும் தங்கள் username-ஐக் கிளிக் செய்து, profile print பட்டனைக் கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்தபின் கையொப்பமிட்டு, தங்கள் வசம் வைத்துக் கொள்ளவும்.
• மாணவியர் சேர்க்கைக்கான தகவல் தங்களுக்கு வழங்கப்பட்டபின்பு, இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினைக் கல்லூரியிலிருந்து கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.